இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? மாணவி கேள்விக்கு அமைச்சர் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2021

இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? மாணவி கேள்விக்கு அமைச்சர் பதில்!

திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் மகேஷ் பெய்யாமொழி, பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி, இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத்தேர்வை மார்ச் மாதமும் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முதல்வரின் அனுமதி பெற்று இதற்கான சுற்றறிக்கைகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல்பாஸ் என்று போடப்பட்டுள்ளது. இதனால் எங்களது உயர் கல்வி படிப்பிற்கு பாதிப்பு வருமா என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர், உலகம் முழவதும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

2 comments:

  1. PG TRB EXAM S THALLI VAIKKA VENTUM

    POTHIYA NATKAL ILLAI


    NO TIME FOR PG TRB EXAMS


    BY

    JAYPRAKASH SALEM

    ReplyDelete
  2. ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் அதானே....
    So simple

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி