கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2021

கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றம் உத்தரவு.

 

தொழில்முறை ஆங்கிலப் பாடம் நடப்பு கல்வியாண்டிலும் கட்டாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:


தமிழகத்தில் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதுசார்ந்த கல்லூரிகளில் 2020-21-ம் கல்வியாண்டில், இளநிலை பிரிவில் தொழில்முறை ஆங்கில பாடம் (Professional English ) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாடம் முதல் மற்றும் 2-ம் பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிலும் தொழில்முறை ஆங்கில பாடத்தை முன்னோட்டமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் (2022-23) 3, 4-ம் பருவத்தில் தொழில்முறை ஆங்கில பாடம் அமல்படுத்தப்படும். அதற்கான, பாடத்திட்ட வடிவமைப்புகள் குறித்து அனைத்து கல்லூரிகளும் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி