தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க அரசு பரிசீலிக்குமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் - kalviseithi

Oct 2, 2021

தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க அரசு பரிசீலிக்குமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

 

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுரை வரை மாற்றமில்லை.


நவம்பர் 1ம் தேதி தீபாவளி என்றாலும் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதில் மற்றமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுரை வரை மாற்றமில்லை. ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை, மருத்துவத்துறை வல்லுநர்களின் ஒப்புதலோடுதான் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.  திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக உள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் தெரிவித்தார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதே போல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

4 comments:

 1. இது மாதிரி ஆசிரியர் பொது மாறுதல் பற்றி தைரியமாக கூறுங்கள் பார்ப்போம்....பணி நியமனம் குறித்து தைரியமாக கூறுங்கள் பார்ப்போம்......

  ReplyDelete
  Replies
  1. அது முடியாது பா......

   Delete
 2. வயது வரம்பு நீக்கம் பற்றி பேச மாட்டார்.

  ReplyDelete
 3. நான் பதில் சொல்றேன்...

  ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி