பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2021

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

 

அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர், விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது" எனக் கூறிய அவர் தொடர்ந்து...

"பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது. அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.


பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும்.


'அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்' என்று மாற்றிக்காட்ட உழைத்து வருகிறோம்" என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

11 comments:

  1. தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள் முதலில். பிறகு பார்க்கலாம்....

    ReplyDelete
  2. Yes pls posting podunga ethachum method use panni

    ReplyDelete
  3. School reopen pannathum postings poduvomnu sonnare namma minister ippo atha pathi pesavea mattranga vallkeye veruthu ponathu

    ReplyDelete
  4. First GO pass pannunga govt servants & politicians children all must study in govt schools

    ReplyDelete
  5. what about transfer counselling??

    ReplyDelete
  6. நவம்பர் tranfer counselling date pls????

    ReplyDelete
  7. அரசு பள்ளியில் சேர்த்தா மட்டும் posting போட்டுரூவீகளா??????????????????🤭🤭🤭🤭 Unga kuzhanthaikalai serthunga muthalla...enga pillaikallellam arasu palliyil than padikkiraanga....

    ReplyDelete
    Replies
    1. athan trb exam podurangale .. vera ena venum

      Delete
    2. vera onnume vendam ....Hr sec mattum than pallikalvithuraikku sonthama...high school posting ellam eppo poduvanga...

      Delete
  8. First appointed the (TET+ TRB) passed teacher in special teacher also.then (C.M) announced in election promise that we are conform the parttime teacher when the dmk win election.so u the best and see this pandemic sitution do this must this is the practical.if u clearly do this work properly the students are automatically join in government school.pls use the cense.if u appointed new teacher just now.they also person in future they also ready to strike to permanent us.so the government considered,use the brain and take action for this teachers pls don't gave anger for the teachers.🙄😡😡😡😡🤨🤨🤨🤨😠😠😠😠

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி