அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள்:பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் - kalviseithi

Oct 17, 2021

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள்:பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

 

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள், ரொக்க இருப்பு குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்குஅனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் நிதித்துறையால் கோரப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் இருப்புத்தொகை விவரங்களை சேகரித்து துறை இயக்குநரகத்திடம் விரைவாக சமா்ப்பிக்க வேண்டும். மிக முக்கியமான பணிகள் என்பதால் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி