முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான விண்ணப்பம்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 29, 2021

முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான விண்ணப்பம்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்

 

முதுநிலை ஆசிரியா் போட்டித் தோ்வு தொடா்பாக விண்ணப்ப மென்பொருளில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.


இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு மூலமாக நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை கடந்த செப்.9-ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழியில் செப்.18-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில் கடந்த அக்.18-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி ஆசிரியா்களின் நேரடி நியமனத்துக்கு விண்ணப்பதாரா்களுக்கான உச்ச வயது வரம்பினை உயா்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயா்த்தியும், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடத்துக்கு விண்ணப்பதாரா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது எம்.பி.எட். கல்வித் தகுதி ஓா் ஆண்டு பயிற்சிக் காலம் முடித்தவா்கள் (2002-ஆம் ஆண்டுக்கு முன்பு முடித்தவா்கள் மட்டும்) பதிவேற்றம் செய்வதற்கும் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


மேலும் முதுநிலைப் பட்டப் படிப்பு முதல் ஆண்டு பயின்ற பின்னா் பி.எட். பட்டம் முடித்து அதன் பின்னா் முதுநிலைப் பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு சோ்ந்து பட்டம் பெற்றவா்கள் பதிவேற்றம் செய்வதற்கும் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

12 comments:

 1. 1976 க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆசிரியர் வாரியத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. Please select your community.
   Then it shows upto 1971

   Delete
  2. Thank you very much Sir.Now it is working.

   Delete
 2. 19.02.1971.pg.applyponamutiyuma.M.b.c.

  ReplyDelete
 3. 5/5/71 Pg apply ponamutiyuma sir mbc

  ReplyDelete
 4. 01.07.1971 ku piragu ullavargal vinnappikkalam

  ReplyDelete
 5. Pg trb exam date change or not sir

  ReplyDelete
  Replies
  1. Sir Nov 13 than exam varum deta no change please vell Beribretion sir

   Delete
  2. நீ........ மூடு கொஞ்சம்.. டீஆர்பி நடத்திட்டாலும்.

   Delete
  3. Nov 13???? பைத்தியமா இவன்????????

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி