மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து படி வழங்க தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2021

மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து படி வழங்க தமிழக அரசு உத்தரவு.

மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு போக்குவரத்துப் படி வழங்கலாம் என அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் களின் பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் போக்குவரத்துப்படி என தனியாக தொகை வழங்கப்பட்டு வருகிறது . மாற்றுத்திறனாளி ஊழி யர்களின் தனிப்பட்ட விடுமுறை நாள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து போக்குவரத்துப்படியில் பிடித்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அர சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது . அந்த கடிதத்தில் , பள்ளிகளில் காலாண்டு தேர்வு , அரையாண்டு தேர்வு , முழு ஆண்டு தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாள்க ளுக்கு போக்குவரத்துப் படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகளில் பார்வைத்திறன் குறைபாடு , கை , கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபா டுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப் படியில் பிடித்தம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கருவூல மற் றும் கணக்குத் துறை ஆணையர் , அனைத்து மாவட்ட கருவூல அலுவ லர்களுக்கு தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ( நிதித்துறை ) எஸ்.கிருஷ்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் , தற்செயல் விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாள்களில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு , அரையாண்டு , முழு ஆண்டு விடுமுறை நாள்கள் பணிக்காலமாக கரு தப்படுவதால் பார்வைத்திறன் குறைபாடு , கை , கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்க ளுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் எனத் தெரிவித்துக் கொள்கி றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி