தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2021

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

 

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக பூஜ்யம் காலிப்பணியிடம் அறிவித்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு வரவேற்பு - ஆசிரியர்களுக்கும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.


மாநிலத்தலைவர் அவர்களின் பி.கே.இளமாறன் அறிக்கை :

           பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கானஇட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கின்றேன்.

     நேர்மையான நிருவாகத்திற்கும் கல்வித்தரம் உயர்வதற்கும் அரசியல்,பணம் ஆகியவையின்றி  மாறுதல் கலந்தாய்வு  கல்விஅதிகாரிகளுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வெளிப்படையான நிருவாகத்திற்கு வழிவகுக்கும். 

 பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களுக்கு முன் உதாரணமாக அமையும்.

     மேலும் இதுவரை  இயக்குநர் அவர்கள்தான் மாவட்டகல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுவந்தது. விரும்பும் இடங்களுக்கும் சொந்தஊருக்கும் செல்லமுடியாமல் சிரமம் இருந்தது.தற்போது பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் நடக்கும்போது வாய்ப்புகிடைக்கும். இதேபோன்று தலைமையாசிரியர்,  முதுகலை ஆசிரியர் தொடங்கி இடைநிலை ஆசிரியர்கள் வரை பூஜ்யம் காலிபணியிடம் அறிவித்து இடமாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம். வெளிப்படைத்தன்மையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களின் நிருவாகத்திற்கு மேலும் ஒரு மைல்கல்.

       தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு. முதல்வர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் ஆகியோர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 பி.கே.இளமாறன், மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்,

  98845 86716

11 comments:

  1. Nadakkuratha peasunga sir counciling vaikirathe nadakkumo illaiyo ithula zero counling no chance

    ReplyDelete
  2. First counselling nadakutha pakalam

    ReplyDelete
  3. We r expecting counselling Sir. We r working more than 5 years in hills

    ReplyDelete
  4. https://www.kalviseithi.net/2021/10/blog-post_51.html?m=1

    ஒரு சங்கம் வேணாம்னு சொல்லுது.
    ஒரு சங்கம் வேணும்னு சொல்லுது.
    ஒரே ஸ்கூல்ல 20 30 வருஷம் வேலை பாத்தா என்ன அர்த்தம்.. உலகம் பெருசு...

    ReplyDelete
  5. இது ச‌ரியான‌ ந‌டைமுறை தான்...ஆசிரிய‌ர் க‌ல‌ந்தாய்விலும் இத்த‌கைய‌ ந‌டைமுறையைப் பின்ப‌ற்ற‌ வேண்டும்..அப்பொழுது தான் க‌ல்வித்துறையில் இருக்கும் த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டும்...ஒரே ப‌ணியிட‌த்தில் ப‌ல்லாண்டுக‌ள் ப‌ணிபுரிவ‌தால் ஏற்ப‌டும் ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் தீர்க்க‌ப்ப‌டும்..

    ReplyDelete
  6. இளமாறா இது நன்மையை விட தீமையில் முடியும்

    ReplyDelete
  7. வரவேற்க வேண்டிய அருமையான திட்டம்

    ReplyDelete
  8. Enga chellam poi iruntha ithanai nalai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி