தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2021

தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!

 

தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்.6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சட்டப்படிப்பு:


தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மறுபுறம் மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் தற்போது நிலையில் அக்.6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கான விண்ணப்பங்களை தொடர்ந்து சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் வரும் 4ம் தேதி வரை நடைபெறும் எனவும் சட்டப் பல்கலை பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் கூறியுள்ளார்.


இதையடுத்து அக்.6, 7 ஆகிய தேதிகளில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். இதை தொடா்ந்து 9-ஆம் தேதி மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும். அதை பெறும் மாணவர்கள் அக்.11 முதல் 13-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி