பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 5, 2021

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!


மார்ச் 2021 , இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு தொடர்பாக அச்சடித்து வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் ஏதேனும் பள்ளிகளிலிருந்து பெறப்படின் , உதவி இயக்குநர்கள் அதனைத் தொகுத்து பட்டியலிட்டு தகுந்த ஆதாரங்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள நகலுடன் இணைத்தனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


1. தற்காலிகச் சான்றிதழில் பதிவுகள் சரியாக இருப்பின் அதன் நகலை இணைத்தனுப்ப வேண்டும் . தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டது ) 

2. தேர்வரின் பிறந்த தேதி , முகப்பெழுத்து மற்றும் பெயர் திருத்தங்கள் ( தமிழ் / ஆங்கிலம் ) எனில் மாற்றுச்சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை இணைத்தனுப்ப வேண்டும் . ( தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டது ) 

3. தந்தை / தயார் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட ஆளறிச்சான்றிதழ் ( Bonafide Certificate ) இணைத்தனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி