மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! - kalviseithi

Oct 18, 2021

மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் இயற்பியல் வகுப்பை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இரண்டாவது வகுப்பான இயற்பியல் வகுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றுள்ளனர்.


இதனைக் கண்டிக்கும் விதமாக, அம்மாணவர்களைக் கரும்பலகையின் கீழே முட்டிப் போட வைத்த இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன், தன்னை எதிர்த்துப் பேசிய மாணவர் ஒருவரை கையில் வைத்திருந்த பிரம்பால் தாக்கியுள்ளார். அத்துடன், அம்மாணவரைக் கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதைக் கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் உள்ளனர். இதனால் இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் வரை சென்றது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  (15.10.2021) அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் ஆசிரியர் சுப்பிரமணியன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ''பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது. அப்படி துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நர்சரி பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக தவறுதலான அறிக்கை வெளியாகியுள்ளது. இதுபற்றி விரைவில் தெளிவான அறிக்கை வெளியாகும். அங்கன்வாடியில் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனையில் தெரிவித்திருக்கிறோம்'' என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11 comments:

 1. Hello teachers don't do anything... Students life Nasamaga pogattum.... Minister also told know, if not coming to class, don't worry about him.... Otherwise u go to jail.... Etharka nee kasta pattu padithu govt velaikku vantha.... Be safe ur life

  ReplyDelete
  Replies
  1. One side justice is not good for society...think teacher side also

   Delete
 2. இதற்கு ஏதாவது மாற்று வழி செய்ய வேண்டும். ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும். முறை தவறும் மாணவர்களை அவர்கள் சீர்படுத்தட்டும். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வந்து குறும்படம் எடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது. ஆசிரியர்களை அவதூறாக பேசினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வரைவு கொடுக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கால வாழ்க்கை சீர்கெட்டு போவதை ஆசிரியர் அல்லாத ஒருவர் கண்டிப்பாக மாற்ற முடியாது.

  ReplyDelete
 3. Ur statement is 100% is correct Sir, but who's realize parents and govt need to know, teacher intentions, if continue this student attitude after ten years 40% of students in jail only... Parents will give full right to teachers, so only control students give good life in future... God only will help to young talents...

  ReplyDelete
 4. சம்பளம் வாங்கனோமா
  நாளை கடத்தனோமானு govt ஸ்கூல்ல வேலை பாக்கணும்...
  பாடம் நடத்தணும்னு முடிவு பண்ணிட்டா வன்கொடுமை சட்டம் பாயும் ..
  பய புள்ள கோட்டா ல உள்ள போய்டும் வாத்தியார் தான் கோர்ட் கேஸ்னு அலையனும்...
  Beware of govt school students 🚫

  ReplyDelete
 5. அடியாத மாடு படியாது.

  ReplyDelete
 6. மாணவர்கள் வகுப்பை கட் அடிப்பதும்,திருட்டுதனமாக செல்போன் கொண்டுவருவது தவறு இல்லையா?

  ReplyDelete
 7. என்னைக்கு அரசு மாணவர்களை அடிப்பது குற்றம் என்று சொல்லுச்சோ!என்னைக்கு அரச 8 ஆம் வகுப்பு வரை all pass னு சொல்லுச்சோ! அப்பவே கல்வியின் தரம் நாசமா போச்சு

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் .. பசங்கள அடிக்காம சொல்லி கொடுங்க.. சாட்டை சமுத்திரகனி மாதிரி இருனு உருட்டுவானுங்க..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி