BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன? - kalviseithi

Oct 22, 2021

BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?

 

வாட்ஸ்அப்பில் வந்த செய்தி...


சரியான, தெளிவான கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை..


எந்த இடம் காட்டப்படும், எந்த இடங்கள் மறைக்கப்படும் என்கிற விபரங்கள் கடைசி வரையிலும் தெரியவில்லை..


முன்னுரிமை பட்டியல் வெளியிடப் பட்டு ஆசிரியர் பயிற்றுநர் அனைவரிடமும் திருத்தம் ஏதுமில்லை என்று கடிதம் பெற்று முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் தான் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வின் போதே சிலரது தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்ட வினோதமும் நடந்தது...!


ஏற்கனவே இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி புதிதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.. அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதுவரையில் சரி. ஆனால் கலந்தாய்வு நடக்கும் போதே பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை..


மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை.. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு  எண்ணிக்கை.. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.. ஒரு பொதுவான வழிகாட்டுதல் இருக்க வேண்டுமா இல்லையா.. ஒத்தையா ரெட்டையா போடுவது எப்படி சரியாக இருக்க முடியும்.. 


Spouse முன்னுரிமை என்பது அவரவர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால்  அந்த காரணத்தினால் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்த மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்தது அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமைந்து விட்டது..


மாவட்டங்களுக்குள் நடந்த பணி நிரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொந்த மாவட்டத்திற்கு மீண்டும் வருவதற்காக deployment முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..


மாநில அளவிலான பூஜ்ய கலந்தாய்வு என்று அறிவித்த பிறகு முன்னுரிமை அளித்தது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.


அந்த முன்னுரிமை பட்டியலும் கூட எந்த ஆண்டில் பணியேற்றார் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து முன்னுரிமை பட்டியல் என்பது என்ன வித அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்றும் தெரியவில்லை. 2002, 2005, 2010, 2014 என்று எல்லோரையும் ஒரே பட்டியலில் வைத்து அதில் முன்னுரிமை என்றால் 5 வருடம், 10 வருடம், 15 வருடம் என பணியாற்றிவரும் அரசு ஊழியரின் பணி மூப்புக்கு என்ன மரியாதை, என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை. 2007ல் பணி ஏற்றவர் சொந்த மாவட்டத்தில் தன்னுடைய பணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரை விட பணியில் இளையோர்  அவருடைய வாய்ப்பை பறிக்க முடிகிறது என்றால் இது என்ன வகையான அணுகுமுறை..?


Convertion மற்றும் பணி ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் தற்போது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதன் மூலமே மாவட்டத்தில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி இருக்க முடியும். அதைச் செய்யவில்லை. இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..


மீதி உள்ள இடங்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். அதை செய்யவில்லை.


பணியில் மூத்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர். சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தோர் பல்வேறு மாவட்டங்களுக்கு பந்தாடப் பட்டுள்ளனர்.


சில நூறு பேருக்கு வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு சில ஆயிரம் பேரை கடும் மன உளைச்சலுக்கும் பரிதவிப்பிற்கும் ஆளாக்கி உள்ளது. குடும்பங்கள், குழந்தைகள், கணவன்/மனைவி என பலரையும் நிம்மதியற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.


காலை எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தனக்கான பணியிடத்தை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு செய்து விட்டு எதற்கு காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே பத்து, பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த கொடுமைகள் ஒருபுறம்..


காத்திருந்து, பொறுமை இழந்து அதிகாரிகளிடம் கேட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று இரவு வீடு வந்து சேர மீண்டும் ஒரு தகவல் வருகிறது. உடனே வந்து ஆர்டர் வாங்கி புதிய பணியிடத்தில் சேர வேண்டும்.. ஆசிரியர் பயிற்றுனர்கள் அயராது பணியாற்றுவதால் அதிகாரிகள் இவர்களை ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்றே நினைக்கின்றனர் போலும். ஒரு சுற்று சுற்றியதும் DPO வந்து விடுவார்கள். இன்னொரு சுற்று சுற்றியதும் BRC போய் விடுவார்கள். அடுத்த நொடியில் பள்ளிக்கும் பார்வையிட்டு விட வேண்டும்..!


பல இடங்களில் மருத்துவ வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை.


தேவையில்லாத மன அழுத்தம், பதற்றம் காரணமாக மானாமதுரையில் பலியான ஆசிரியர் பயிற்றுநர் சின்னத் தங்கம்  கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கும்... அவை ஒரு பக்கம் இருக்கட்டும்..!


ஆசிரியர் பயிற்றுநர்கள் வாழ்வில் அக்டோபர் 20-2021 கலந்தாய்வு ஒரு போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படி அவர்கள் மறக்க நேர்ந்தாலும் கூட மறைந்த நண்பர் மானாமதுரை சின்னத் தங்கம் அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி..!


இத்தனை சிரமங்கள் இருந்த போதிலும் இந்த கலந்தாய்வு மூலம் கல்வியை மேம்படுத்தும் வகையில், பணித் தரத்தை உயர்த்தும் வகையில் என்ன சாதித்துள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்..!

- தேனி சுந்தர்

13 comments:

 1. Dear all brtes....

  ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பது தான் இயற்கை நியதி.

  ஆனால் 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்கள் என்று மாற்றம் செய்த போது brtes மௌனமாக கை கட்டி வேடிக்கை பார்த்தீர்கள் .....அதன் விளைவு தான் இது..

  ReplyDelete
  Replies
  1. இதை brte தான் நிர்ணயம் செய்தார்களா...அது அரசின் கொள்கை முடிவு...

   Delete
  2. Brte counseling also government decision policy

   Delete
 2. 1 2 3 4 5 vakuppukaluku thani thaniye pada puththakangal vaiththu kondu 2 vakuparaikalum 2 asiriyarkalum irupathu eppadi sariyagum? Muraiyagum?

  Athai vedikkai partha nengal indru nadapathaiyum vedikkai parungalen brtes (sundar theni)

  ReplyDelete
  Replies
  1. நானும் ஆசிரியர் தான் நண்பரே. ஆம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வேண்டும். அதற்கு இது பழிவாங்கும் வாய்ப்பாக கருதலாமா? அது அரசோடு பேச வேண்டிய கோரிக்கை.

   Delete
  2. ஒரு ஆசிரியர் இரண்டு /மூன்று வகுப்புகளை கையாள்வதை ஆரம்பத்திலே ஆசிரியர்களாகிய நீங்கள் தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று ஆரோக்கியமான கல்வி இருந்திருக்கும்.

   இங்கு ஆரம்பமே (ஆரம்ப கல்வி) குளறுபடியாக உள்ள போது BRTE கலந்தாய்வில் குளறுபடிகள் இருப்பதில் ஆச்சிரியம் என்ன நண்பரே?

   கற்றல் கற்பித்தலுக்கு போதிய அவகாசம் முக்கியத்துவம் அளிக்காமல் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி முறையை வேடிக்கை பார்த்த நீங்கள் இதையும் வேடிக்கை பாருங்கள் BRTES


   Delete
  3. கற்றல் கற்பித்தல் சுதந்திரமாக முறையாக சரியாக அமைய ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற சூழலை அமைத்துக்கொடுத்தாலே போதும்.
   அரசு பள்ளிகளின் தரம் உயரும்.

   ஊதிய உயர்வுக்கும் பிற கோரிக்கைகளுக்கு போராடும் teachers/ brte association/ government servants associations மாணவர்களின் நலன்களுக்கு எவ்விதமான போராட்டங்களும் செய்வது இல்லை.

   Delete
 3. இன்றைய 40 நாளை 50ஆகும்போது
  தெரியும் வலி

  ReplyDelete
 4. ஒரே நோக்கம் தான்.. மீண்டும் சாதகமான இடத்திற்கு பணிமாறுதல் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்வார்களோ, அதுதான் அதிகம் நடக்கப் போகிறது..

  ReplyDelete
 5. Oru asiriyar oru vagupparayil 3 vaguppukalukku (athavathu 3*5=15 ...15 subjects) padam edukirar.


  Strippu kuzhappam sumaiyaga irukirathu ....

  Intha kodumaikalai vedikai partha brtes intha counselling ah vedikai parungalen ....

  Enaku vantha thakkali chatni ...unaku vantha raththama?

  ReplyDelete
 6. சீனியர்கள் வசிப்பிடம் அருகே பட்டதாரி ஆசிரியர் பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஏற்க மறுத்த காரணம் தான் இதற்கு பதில். அரசின் நடவடிக்கை சரி. ஏனெனில் deployment BRTE s பணி நிரவலில் பாதிக்கப் பட்டவர்கள். அவர்கள் யாரும் வேற்று கிரக வாசிகள் இல்லை. அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை மன அழுத்தம் இல்லையா . வீட்டு வரவேற்பு அறையில் அலுவலகம் செயல் பட சீனியர்கள் ஆசைப்படும் போக்கு மாற வேண்டும். சீனியர்கள் இந்த நிலைப்பாட்டில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை இழந்து உள்ளோம்.

  ReplyDelete
 7. ஏற்கனவே குடும்பத்தை விட்டுதொலை தூர மாவட்டத்தில்பணிபுரிந்தோர்க்கு தற்போது தான் சொந்த மாவட்டத்தில் பணி புரிய இந்த கலந்தாய்வு மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.இவ்வளவு நாள் குடும்பத்தை விட்டுத்தான் பணி புரிந்துள்ளனர்.

  ReplyDelete
 8. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் பொழுது 3 சதவீத அகவிலைப்படி உயர்வு என்ற வெறும் செய்தியாக வெளியிட்டு முடித்து விடுகின்றனர்.

  ஆனால் இதுவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படி வழங்கியிருந்தால், *"அடித்தது ஜாக்பாட்! எகிறியது சம்பளம்!!"* என்றும் பல வர்ணணைகளோடு செய்தி வெளியிடும் ஊடகத்தினரை என்னவென்று சொல்லலாம்...

  ஏற்கனவே 17 சதவீதத்திலிருந்து 11 சதவீதம் உயர்வு வழங்கி 28 சதவீதமாக பெற்றுக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் *இந்த 3 சதவீதத்தையும் சேர்த்து 31 சதவீதமாக பெற உள்ளனர்.*

  *ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் 17% தான் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மைச் செய்தியை எந்த ஊடகம் ஆவது பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளதா????*😭😭😭😭

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி