CBSE - 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முதற்கட்ட தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2021

CBSE - 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முதற்கட்ட தேர்வு அட்டவணை வெளியீடு.

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு எழுத 36 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 லட்சம் மாணவ மாணவியர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதற் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், பாடங்களை நடத்துவது சிரமமாக இருந்தது. அதனால் ஆன்லைன் மூலம் மாணவ மாணவியர் பாடங்களை படித்து வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தினால் மாணவ மாணவியர் தேர்வு எழுத சிரமப்பட நேரிடும் என்பதால், இரண்டுகட்டங்களாக தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.


மேற்கண்ட தேர்வுகளை எழுதுவதற்காக நாடு முழுவதும் 36 லட்சம் மாணவ மாணவியர் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது தவிர, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தற்போது தேர்வு எழுத பதிவு செய்துள்ளவர்களில் 50 சதவீதம் பேர் முதற்கட்ட தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதையடுத்து, முதற்கட்ட தேர்வுக்கான அட்டவணையை, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, 10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரையும்,  12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.   இந்த தேர்வுகள் கொள்குறி வகையிலான கேள்விகளை கொண்டதாகவும் மாற்றி அமைத்துள்ளது.

இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளதால், 7ஆயிரமாக இருந்த தேர்வு மையங்களை 14ஆயிரமாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. 10ம் வகுப்பில் 22 லட்சம் மாணவ மாணவியர் ஓஎம்ஆர் அடிப்படையிலான விடைத்தாள்களில் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 14 லட்சம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பில் தேர்வு எழுத உள்ளனர். கடந்த 2020ம் கல்வி ஆண்டில் இடம் பெற்ற பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது கொள்குறி வினாக்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் முதற்கட்ட தேர்வு 90 நிமிடங்களும் இரண்டாம் கட்ட தேர்வு120 நிமிடங்களும் நடக்கும். இது  தவிர இரண்டு கட்ட தேர்விலும் செய்முறைத் தேர்வுகள் இடம் பெறும். முதற்கட்டத்துக்கான செய்முறைகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி