Flash News : TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2021

Flash News : TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

 ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும்!







ஆணை :


1. மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கையில் , ஆசிரிய வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது . 


4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் 61 GOT தெரிவித்துள்ளார் . எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது : 


( i ) தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 ( a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

( ii ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

 ( iii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது . 

6. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . /

GO No. 144 - SE2 - TRB Age Relaxation .pdf - Download here

34 comments:

  1. PG TRB 2021

    Online TEST SERIES BATCH
    தமிழ் & English வழியில் கேள்விகள்.

    SUBJECTS + EDUCATION + GK ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
    COMPUTER INSTRUCTOR Gr.I)

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. Thallium pogaathu killium pogaathu...

    ReplyDelete
  3. MPC PG TRB coaching center Erode
    Test Schedule
    # 70 Slip test
    # 10 Unit test
    # 5*20% test
    # 4*30% test
    # 3*50% test
    # 7 Full test
    # Education + GK test
    # Cost 2000 + Printing charges
    For details 9042071667

    ReplyDelete
  4. MPC PG TRB coaching center Erode
    Test Schedule for Mathematics only
    # 70 Slip test
    # 10 Unit test
    # 5*20% test
    # 4*30% test
    # 3*50% test
    # 7 Full test
    # Education + GK test
    # Cost 2000 + Printing charges
    For details 9042071667

    ReplyDelete
  5. What about the above 50 years?
    It is not a fair solution.
    This is a strategy to divide the opposing team

    ReplyDelete
  6. PG TRB 2021*
    Computer Instructor
    Online Coaching Classes

    *Magic Plus  Coaching centre, Erode -1.*
    For Admission:9976986679, 6380727953

    ReplyDelete
  7. Ph trb sex units test online coach best records. All sex units available me only.

    ReplyDelete
    Replies
    1. டைப் பண்ணியது இந்தி காரனா இருப்பானோ

      Delete
  8. Exam date will be extend (20days to upto December).

    ReplyDelete
  9. தேர்வு நாள் மாற்றம் வராது

    ReplyDelete
  10. வரவேற்க தக்க செய்தி நன்றி CM Sir

    ReplyDelete
  11. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும் முதலமைச்சர் சொன்னதை செய்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. Sathi seithirukkirar.age relaxa rathu pannuvom endru than sonnar

      Delete
    2. 50kul posting aagalana Enna seiveergal

      Delete
    3. ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தது உண்ணாவிரதம் செய்தது அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அவர் இந்த தளர்வு அறிவித்துள்ளார் நீதிமன்றமே இது தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது.அப்படிக்கு இருக்கும் போது இதை கடைசி வாய்ப்பாக எண்ணி முயற்சி செய்தால் பணி கிடைக்கும் ஒரு வேளை இந்த வாய்ப்பில் உங்களுக்கு பணிகிடைத்தால் யாரை நினைத்து பார்ப்பீர்கள் வாய்ப்பு கேட்டோம் தந்து விட்டார்கள் யாரையும் எதுவும் சொல்லாமல் இன்னும் ஒரு மாதம் கடின உழைப்பு கொடுத்து படிக்கலாம் எல்லாம் நல்லதே நடக்கும்

      Delete
    4. ௭ந்த முதல்வர் ௭தை செய்தாா்

      Delete
    5. நீதிமன்றமே அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி உள்ளது அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி அரசுபணியினை பெற்றுச் செல்லுங்கள்

      Delete
    6. Sorry sir.
      Present CM said that he will abolish the G.O.( ie. 40-45) and he assured to set the age as previous (ie 57).
      But he didn't do his assurances.
      Now again above 50 years candidates affected.
      Then how can you say that CM did what he said.
      Please don't stop the agitation against age problem.
      Now Somebodies getting solution.but this is not a appreciable solution.
      Only solution is upto 59 years.

      Delete
    7. வயது வரம்பு ௭ன்பது குறைப்பது நல்லது ௮ல்ல ௮ரசானை ரத்து செய்வோம் ௭ன வாக்குறுதி கொடுத்து யாமாற்றினாா்களே..

      Delete
    8. ௮ப்ப50வயதிற்கு மேல் ௨ள்ளவர்கள் நிலைமை ௮வர்கள் பட்டம் பெற வில்லையா இதுதான் ௮நீதி ௮டுத்ததேர்தல் வரட்டும்.. ௮ப்ப தெரியும்

      Delete
  12. please extend pg application submission date

    ReplyDelete
  13. 50வயது பட்டம் பெற்றவர்
    என்ன பாவம்
    செய்தனர்

    ReplyDelete
  14. முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. I think you are below 50.
      Think about 50 and above then thank CM

      Delete
  15. பணி நியமனத்தில் வயது நிர்ணயிக்கும் போது அப்ப வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி