TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 11, 2021

TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது!

 

டெட்டில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது - ஹிந்து தமிழ் செய்தி

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால் , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி , அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேரலாம். இந்நிலையில் , கடந்த அதிமுக ஆட்சியில் , முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முத லாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. 


பொதுப் பிரிவினருக்கு 40 , எஸ்.சி. , எஸ் . டி . , பி.சி. , பி.சி. ( முஸ்லிம் ) , எம் . பி.சி. பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 45 என வயது நிர்ணயிக்கப்பட்டது.இந்த தேர்வுக்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. வரும் 17 - ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். 


ஆசிரியர் பணிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி 40 வயதைக் கடந்த பி.எட் . பட்ட தாரிகள் போராட்டம் நடத்தியதுடன் , முதல்வர் , பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.


 மத்திய அரசின் இலவச கட் டாயக் கல்வி உரிமை சட்டப்படி , 1 முதல் 8 - ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர ‘ டெட் ’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை தமிழகத்தில் 5 முறை இத்தேர்வு நடத்தப்பட்டு , சுமார் 1.50 லட்சம் பி.எட் . பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் , 40 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் , டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி , அதன் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 - ம் ஆண்டுக்கான வருடாந் திர தேர்வு காலஅட்டவணையில் இந்த போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் , கரோனா சூழல் காரணமாக அத்தேர்வு இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.


கடந்த 30.1.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படிதான் , முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நடை முறையை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விலும் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 


' இதனால் , ' டெட் தேர்ச்சி பெற்று , 40 வயதைக் கடந்த பி.எட் . பட்ட தாரிகள் , இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் ஆசிரியர் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு அவர்களால் விண்ணப்பிக்க இயலாது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் , புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு விதிமுறை காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கி நிற்கின்றனர்.

15 comments:

 1. Bcoz of this new rules many person affected. Yesterday we met Govt officials and politicians. They told positive news. By Dhanapal 9626334520. Don't feel.

  ReplyDelete
 2. Anybody need clarification, feel free call to me.

  ReplyDelete
 3. Where is 2013,2017,2019 association leaders? What are you doing? You will put more effort , you get good results.

  ReplyDelete
 4. TNTET 2013,2017,2019,notification la 57 age.Pass candidate NCERT life certificate sollranga,appuram yeppadi?

  ReplyDelete
 5. பிஜேபி க்கு vote போட்டு இருந்தால் நியமன தேர்வை ரத்து செய்து இருப்பார்கள், திருட்டு திராவிட நாய்கள், எல்லாத்தையும் சேர்த்து வைத்து கழுத்து அறுத்துட்டாங்க

  ReplyDelete
  Replies
  1. DTEd college moodana madhiri B.Ed college moodana than ellam olunga nadakkum.
   Summa panni kutti podara madhiri varusha varusham graduate uruvaaki enna use??
   District ku oru b.Ed college podhume... Andha aal kita eduthu sollunga 😄😄😄

   Delete
 6. Dai மாட்டு மோத்திரம் குடிச்சா இப்படிதான் மூளை மலிங்கிரும்

  ReplyDelete
  Replies
  1. Pearl panni moothiram kudicha yippadithan moolai illama pesuva

   Delete
  2. Poda panni moothiram kudicha pannadai

   Delete
 7. I tared my Tet certificate henceforth it is no use. Thanks to vidiyal DMK govt.

  ReplyDelete
 8. Anybody organaize to meet our hounarable CM. Many leaders spoke, DMK will come , I assured job.where is Rajalingam sir. You speak with our cm plz.

  ReplyDelete
 9. Dear respected government, I need to say one thing they have passed before 8 yrs. Ur only not give to them job

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி