TNPSC அலுவலகத்தில் அருணாச்சல பிரதேச தேர்வாணைய அலுவலர்கள் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2021

TNPSC அலுவலகத்தில் அருணாச்சல பிரதேச தேர்வாணைய அலுவலர்கள் ஆய்வு.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அருணாச்சல பிரதேச தேர்வாணையத்தில் இருந்து மாண்புமிகு உறுப்பினர் வருகை புரிந்து தேர்வாணைய நடைமுறைகளை குறித்து தேர்வாணைய குழுவுடன் கலந்து ஆலோசனை தொடர்பான செய்தி வெளியீடு ( 08.10.2021 Press News )



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு , அருணாச்சல பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து மாண்புமிகு உறுப்பினர் திருமதி . முபெங் தாதர் பாகே அவர்கள் வருகைபுரிந்து மாண்புமிகு தேர்வாணையத் தலைவர் திரு . கா.பாலச்சந்திரன் , இ.ஆ.ப. ( ஓய்வு ) மற்றும் மாண்புமிகு தேர்வாணைய உறுப்பினர்கள் திரு.ச.முனியநாதன் , இ.ஆ.ப . ( ஓய்வு ) , பேராசிரியர் க.ஜோதி சிவஞானம் , முனைவர் க.அருள்மதி மற்றும் அருட்பணி ஆ.ராஜ் மரியசூசை ஆகியோரைச் சந்தித்தார்.


இந்நிகழ்வின் போது தேர்வாணைய செயலாளர் திருமதி . பி.உமா மகேஸ்வரி , இ.ஆ.ப. மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திரு . கிரண் குராலா , இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர். அருணாச்சல பிரதேச தேர்வாணைய மாண்புமிகு உறுப்பினருக்கு , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அமைப்பு , சிறப்பு மற்றும் தேர்வு நடைமுறைகள் ஆகியவற்றை தேர்வாணையத்தின் செயலாளர் திருமதி.பி . உமா மகேஸ்வரி இ.ஆ.ப. மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திரு . கிரண் குராலா , இ.ஆ.ப. அவர்களும் விளக்கிக் கூறினார்கள் . அருணாச்சல பிரதேச மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மாண்புமிகு தலைவர் அவர்களும் மற்றும் மாண்புமிகு உறுப்பினர்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி