2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - தமிழக அரசு வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 3, 2021

2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - தமிழக அரசு வெளியீடு

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக பொது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்படும்.


அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2022ல் மொத்தமாக ஆண்டு முழுவதும் 23 நாட்கள் பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு தலைமைச் செயலாளர் வெ இறையன்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்த விடுமுறை தினங்களில் உழவர் தினம், மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் என மொத்தம் 6 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விடுமுறை நாட்கள் பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.5 comments:

 1. Unknown frd tet ku enna method la posting poduvanga nu theliva sollunga please

  ReplyDelete
 2. Evolo vaccancy fill pannuvanga sir please reply me

  ReplyDelete
 3. Government ye posting potta kuda already job la irukaravanga vida maataanga polave...

  ReplyDelete
 4. ST.XAVIER'S ACADEMY,
  NAGERCOIL, CELL:8012381919
  PGTRB2021 class starts on: 04-11-2021.
  நடைபெறும் பாடங்கள்..
  ENGLISH
  MATHEMATICS
  BOTANY
  And
  COMPUTER SCIENCE
  Study materials also available.!

  ReplyDelete
 5. 6days leave Sunday le varuthe.... School pogama ob adikalam nu paathene....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி