அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியலை கட்டாயமாக்க வேண்டும்: வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2021

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியலை கட்டாயமாக்க வேண்டும்: வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை...

அரசு பள்ளிகளில் மீண்டும் 6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..


இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் வெ.குமரேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6-ம் வகுப்பில் இருந்தே அறிமுகப்படுத்தியவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.


அவர் கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு நியாயமான கிடைக்க வேண்டிய கணினி கல்வியை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது.


எனவே, தற்போதைய திமுகஅரசு, அரசு பள்ளிகள் மேன்மை அடையவும், கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் உலகத்தரத்துக்கு இணையாக உயர்ந்திடவும் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாய கல்வியாக கொண்டுவர வேண்டும். கேரளாவில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாயமாகவும் 6-வது பாடமாகவும் உள்ளது.


கணினி ஆசிரியர்


தரம் உயர்த்தப்பட்ட அனைத்துஅரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம், பிஎட் முடித்த வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

8 comments:

 1. வரவேற்கிறேன். வாழ்த்துக்கள். கணினி பாடம் கொண்டு வரவும்.

  ReplyDelete
 2. Good decision.. give me opportunities to all computer science teachers

  ReplyDelete
 3. அரசு துறை அல்லது தனியார் துறை எங்கு வேலைக்கு சென்றாலும் கணினி அறிவு அவசியம். எனவே அரசு கணினி பாடத்தை பள்ளி மாணவர்களுக்கு கட்டாய பாடமாக ஆக்கினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 4. There are no chances for B.Ed Teachers to Govt Job with only fewest Teacher Recruitments by TRB. Making Computer Science is one the main subject for all schools which is the best solution for B.Ed Teachers to get job

  ReplyDelete
 5. Now a days everything based or depend on the computer. In the private sector starting from the class 1 to class 12 computer subject should be why not computer subject not processed to the Govt schools?

  ReplyDelete
 6. Yes thats true. The govt must take necessary steps to create vacancies

  ReplyDelete
 7. No money in tn govt hand. So no chance of posting. If possible fixed pay of 6000 for 10 years. Please understand the reality.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி