பி.ஆா்க் கலந்தாய்வு: 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு - kalviseithi

Nov 2, 2021

பி.ஆா்க் கலந்தாய்வு: 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

பி.ஆா்க் கலந்தாய்வில், இதுவரை 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்ககள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


அதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.27 இல் தொடங்கி நவ.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.


அதைத் தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த அக்.8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னா், தகுதி பெற்றவா்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 1115 போ் தகுதி பெற்றிருந்தனா். கலந்தாய்வில் இதுவரை 2 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி