வினாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 89 மாணவர்களை துபாய் நகரத்திற்கு சுற்றுலாப் பயணம் அனுப்பி வைத்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - kalviseithi

Nov 19, 2021

வினாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 89 மாணவர்களை துபாய் நகரத்திற்கு சுற்றுலாப் பயணம் அனுப்பி வைத்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


18.09.2021 முதல் 08.11.2021 வரை , இணைய வழியில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில் சிறந்து விளங்கிய , தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் 89 மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . மேலும் , தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் , ஐக்கிய அரபு அமீரக ( United Arab Emirates ) நாட்டிலுள்ள , துபாய் ( Dubai ) நகரத்திற்கு , வருகிற 2021 , டிசம்பர் மாதம் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே , இணைப்பிலுள்ள , தெரிவு செய்யப்பட்ட தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த , சுற்றுலா செல்ல விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோரிடமிருந்து , துபாய் நகரத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல இசைவு தெரிவித்து ஒப்புதல் பெற்ற விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 3 19.11.25 ^ ( 19.11,202J மணிக்குள் இவ்வலுவலக " எம் பிரிவு " மின்னஞ்சல் முகவரிக்கு ( msectndse@gmail.com ) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட மேலும் , விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அவர்தம் அருகாமையிலுள்ள மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்திற்குச் ( Regional Passport Office ) சென்று விண்ணப்பித்து , கடவுச் சீட்டு பெறுவது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியம் என்பதால் , உரிய தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . 


இணைப்பு :

 1. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரம் ( மாவட்ட வாரியாக ) 

2. பெற்றோரின் ஒப்புதல் மாதிரி படிவம்


DSE - Dubai Tour Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி