ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள் ! - kalviseithi

Nov 29, 2021

ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள் !

 

வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள் உயர்ந்த பதவியில், பெரும் செல்வாக்கோடு வலம் வருவது, மக்களிடையே எப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இது, குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக மாறி விட்டது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்கள் கைகள் எப்போது கட்டப்பட்டதோ, அப்போதே சமூகம் தீய வழியில் நடக்க துவங்கி விட்டது.மாணவர் மது குடிப்பதும், போதையோடு பள்ளிக்கு வருவதும், மாணவியர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது.


ஆசிரியரின் கண்டிப்பால் ஒழுக்கமான பிள்ளைகள் உருவான காலம் மலையேறி விட்டது. இன்று மாணவர்களிடம், ஒழுக்கம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.அதிலும், இந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வகுப்பறை கல்வி இல்லாததால், மாணவர்களின் மனநிலை பாதை தவறி விட்டது.ஏராளமான குழந்தைகள், மொபைல் போன் எனும் மாய வலையில் சிக்கி விட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பலர், சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர்.இளம் வயதில் சம்பாதிக்கும்போது, தீயப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.


மேலும், இன்றைய சினிமாவில் பொறுக்கி, ரவுடிகள் தான், கதாநாயகனாக காட்டப்படுகின்றனர். அதை பார்த்து, இளைஞர்களும் தறுதலைகளாக திரிகின்றனர்.தற்போது, காவலர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு; மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனராம். இவர்களை ஆடு திருட அழைத்து சென்ற முக்கிய குற்றவாளியின் வயதோ, 19 என்பதும், அவன் மது அருந்தியிருந்தான் என்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.இதன் மூலம், எப்படிப்பட்ட இளைய சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.இந்த மூன்று குற்றவாளிகள் உருவாக முக்கிய காரணமே, ஒழுக்கமின்மை தான்; அதை கற்று கொடுக்க இயலாதது கல்வி துறை தான்!ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.8 comments:

 1. உண்மை மாணவர்கள் ஒழுக்கமின்மைக்கு காரணம் கல்வித்துறை

  ReplyDelete
 2. மாணவர்களின் தவறுகளை கண்டிக்கும் உரிமைகளை ஆசிரியர்களிடம் முந்து அரசு பறித்து விட்டதால் மாணவர்களின் மத்தியில் ஒழுக்கக்கேடு அதிகரித்துவிட்டது.

  ReplyDelete
 3. ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமைகளை அரசு வழங்கவேண்டும்.

  ReplyDelete
 4. உண்மை ஆசிரியர்கள் கேட்பது எங்களிடம் பிரம்பு தாருங்கள் என்று அல்ல கண்டிக்க உரிமை தாருங்கள் அறிவுரை கூற அனுமதி தாங்கள்

  ReplyDelete
 5. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete
 6. POLYTECHNIC trb friends....heavy rain
  Cm cell ku request Pana kandipa post pone panvangaaa

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி