நீட் மறுதேர்வு நடத்த இயலாது :உச்சநீதிமன்றம் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2021

நீட் மறுதேர்வு நடத்த இயலாது :உச்சநீதிமன்றம் அதிரடி

 

நீட் தேர்வில் கேள்வி பதில் தாள் மாற்றி தரப்பட்டதால் மராட்டியதைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதனிடையே மராட்டியத்தில் சோலாப்பூர் தேர்வு மையத்தில் நீட் கேள்வி பதில் மாற்றி வழங்கப்பட்டதாக மாணவர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருவரின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு சிறப்பு நீட் மறு  தேர்வு நடத்த உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்வு முடிவுகளை ஒன்றாக வெளியிடவும் உத்தரவிட்டு இருந்தது. மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது பற்றி 48 மணி நேரத்தில் பதில் அளிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 16 லட்சம் பேர் தேர்வு எழுதி இருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு தவறுக்காக மறு தேர்வை நாடுவார்கள். அப்படி மறுதேர்வு நடந்துவது சாத்தியமில்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாணவர்களுக்காக வருந்துகிறோம். அவர்களுக்காக அனுதாபம் கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்த இயலாது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

1 comment:

  1. NEET UG 2022*
    Repeater நேரடி வகுப்புகள் & Live Online Classes

    *Separate தமிழ் & English மீடியம்*

    Fresh Batch Classes
    *Hostel* உடன் இணைந்த வகுப்புகள்

    *For Admission:9976986679,
    *Magic Plus NEET Coaching Centre,* *ERODE-1*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி