பள்ளி செல்ல மாணவர்களிடையே ஆர்வம் குறைவு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2021

பள்ளி செல்ல மாணவர்களிடையே ஆர்வம் குறைவு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

 கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் கடந்த 2020 ஏப்ரல் முதல் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.


ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 


இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிரச்னைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா. வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

3 comments:

 1. Pls fill BT and TGT post immediately

  ReplyDelete
  Replies
  1. மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா? இவன (அரசு) என்ன பாக்குறீங்க... ஒரு போஸ்டிங் கூட போடல... பிச்சைக்கார பையன்...

   Delete
  2. Ss.... Students teachers ratio no sufficient... Lack of infrastructure... Ethellam கண்ணுக்கு தெரியுதா நீதிபதி அவர்களே...chumma அறிவிப்பு மட்டும் கொடுத்தால் pothuma

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி