வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகிறது : தமிழகத்துக்கு அதி பலத்தமழை எச்சரிக்கை! - kalviseithi

Nov 7, 2021

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகிறது : தமிழகத்துக்கு அதி பலத்தமழை எச்சரிக்கை!

 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:


தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பா் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 9 , 10 தேதிகளிலும் , தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 10 , 11 , 12 தேதிகளிலும், தமிழக கடற்கரை பகுதிகள் அதனையொட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நவம்பா் 11, 12 தேதிகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், ஆழ்கடலில் இருக்கும் மீனவா்கள் நவம்பா் 9-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள்.


அதி பலத்தமழை:


வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 11, 12 தேதிகளில் பலத்தமழை முதல் மிக பலத்தமழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்தமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி