தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது!: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு திட்டவட்டம்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2021

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது!: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு திட்டவட்டம்..!

 

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது, ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் கோரி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.


தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்திக்‍கு பதிலாக தமிழை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மேலும் அந்தந்த மாநில மொழிகளை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையளி, இந்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் ஒன்றிய அரசு தரப்பில், தமிழ் ஒரு பாடமாக உள்ளதாகவும், தமிழை பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுவதால், அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுவதாக கூறி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

7 comments:

 1. அந்த ஸ்கூலயும் நாசமாக்கிடாதீங்கடா..

  ReplyDelete
 2. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தரமாகவே உள்ளன...‌‌‌‌‌‌அதையும் குட்டிச்சுவராக்கிடாதீங்க

  ReplyDelete
  Replies
  1. ஏன் த‌மிழ் மொழியென்றால் உங்க‌ளுக்கு க‌டுங்கோப‌ம் வ‌ருகிற‌து?..
   த‌மிழ்நாட்டில் த‌மிழ் ப‌யிற்று மொழியாக‌ இருக்க‌க் கூடாதா?...

   Delete
  2. nothing wrong.... fort let him make tamil medium compulsory law in tn stateboard matric schools...

   Delete
 3. தலைப்பும் அதன் சார்ந்த தகவலும் குழப்பம், ஏன் பிடிவாதமாக ஒன்றிய அரசு. ஆளும் மாநில அரசு தான் வீம்புக்கு ஒன்றிய அரசு என ஒன்றாதது போல வேடிக்கை காட்டிவருகிறது. தாங்கள் அவ்வாறு கூறுவதால் என்ன பயன் தாங்கள் இந்திய அரசு உடன் ஒன்று விரும்பவில்லையோ...?

  ReplyDelete
 4. அடேய் கம்முநாட்டிகளா.... மொதல்ல தமிழ்நாட்டுல tnpsc trb tet 10th 12th stateboard தேர்வுகள் கட்டாயமா தமிழ் வழில நடத்த வக்கு இருக்கானு கேளுங்க டா.... kv la உனக்கு விருப்பம் இருந்தா தமிழ் இரண்டாம் தாள் எடுத்துக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. க‌ண்ணிய‌க் குறைவான‌ வார்த்தைக‌ளைத் த‌விர்க்க‌வும்..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி