Flash News : தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2021

Flash News : தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 

தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021 வெளியீடு.

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வியாழுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20-11-2021(மூன்றாம் சனிக்கிழமை ) பணிநாளாக அறிவிப்பு...


 அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021 - Download here

2 comments:

  1. PGTRB ல் தமிழ் பயின்றவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்...

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் b.ed தொலைநிலை கல்வியில் படித்தவர்களுக்கு அது ஆங்கில வழி., எனவே அதற்கு தமிழ்வழி சான்று தர இயலாது என்று பல்கலைக்கழகத்தில் கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக கல்லூரியில் படித்தவர்களுக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தொலைநிலை கல்வியை அரசு பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும்பொழுது அதில் பயின்றவர்களுக்கு ம் தமிழ் வழி சான்றிதழ் கொடுப்பது தானே முறை.
    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, அந்த தமிழ் மொழியை எப்படி ஆங்கில மொழி மூலம் கற்றிருக்க முடியும் ? தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்று தமிழ் மொழி மூலம் தான் கற்பிக்க முடியும். வேண்டுமானால் இயற்பியல் பாடத்தை எப்படி பயிற்றுவிப்பது என்பதை ஆங்கில மூலமாக கற்பிக்கலாம்.
    இந்த சிக்கலினால், தமிழ் பயின்றவர்கள் இச்சலுகையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
    இப்படி ஒரு சிக்கல் உள்ளது அரசிற்கு ஏதாவது ஒரு முறையில் தெரியப்படுத்த வேண்டும். டி ஆர் பி விண்ணப்பிக்கும் மென் பொருளிலும் சிறு மாற்றம் செய்ய வேண்டும். இதனை ஒன்று பல்கலைக்கழகங்களுக்கு அறிவிப்பு கொடுத்தோ அல்லது டிஆர்பி விண்ணப்பங்களில் விதிமுறைகளில் மாற்றம் செய்தோ நெறிப்படுத்த வேண்டும்.
    தயவுகூர்ந்து இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு, அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் தவிப்பில் காத்திருக்கிறார்கள்.
    மேலும் 50 வயது வரம்பில் சலுகை அளித்த பிறகும், 1976க்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு உள்ளது. இன்னும் மென்பொருளில் மாற்றம் செய்யப்படவில்லை. நவம்பர் 9ம் தேதி வரையே கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடவடிக்கை எடுக்குமா அரசு ?

    பொன். சங்கர்
    திருப்பூர்

    ReplyDelete
    Replies
    1. Tamil teaching may be in tamil medium
      But other majors like educational innovation Psychology Educational Challenge may be in English medium.

      So English medium 😂

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி