TNPSC - குரூப்-4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

TNPSC - குரூப்-4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் சூழலில், இதுவரை 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 98% விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர், 1 ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் இல்லை என பதிலளிக்கப்பட்டது.


அதற்கு நீதிபதிகள், "தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் இதுபோல முறைகேடு நடந்ததாக பிரச்னை எழுந்தாலும், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில், தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை கொண்டு சென்றபோது, வழியிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

4 comments:

 1. "கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை"

  OMG

  ReplyDelete
 2. எல்லா திருடனு ம் ஒன்னு சேர்ந்து தேர்வு நடத்தனா எப்படி இருக்கும். வினாத்தாள் தப்பில்லம எடுக்க தெரியாதவ தேர்வு நடத்துனூ எப்படி இருக்கும். போங்கடா நீங்களும் நீங்க தேர்வு வச்ச லட்சனமும்

  ReplyDelete
 3. திருடர் கூட்டம் எல்லாவற்றையும் திருடும்.அரசியல்வாதி என்ற அதிகார பீடத்தில் அமர்ந்து.

  ReplyDelete
 4. நீதிமன்ற ஆட்சேர்ப்பு மட்டும் என்ன யுக்தியை கையாண்டது? 100 பேருக்கு 1000 பேரை நேர்முக தேர்வுக்கு அழைத்து எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் முறைகேட்டுக்கு வழிவகுக்க காரணமாக உள்ளதே.அதை யாரிடம் சொல்வது?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி