TRB - போட்டி தேர்வு நடத்துவதில் சிக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2021

TRB - போட்டி தேர்வு நடத்துவதில் சிக்கல்!

 

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை வன்னியர் சமூகத்தினருக்கு வழங்க, அ.தி.மு.க., ஆட்சியின் போது, கடந்த பிப்ரவரியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.


இதைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் முடிந்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கையை நடத்தி, வன்னியர் சமூக மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


இந்நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுசட்டம் முறையாக கொண்டு வரப்பட வில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது, வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டு, மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.


வழக்கின் இறுதி முடிவு, ஒதுக்கீடு செல்லாது என்பதால், தற்போது மாணவர் சேர்க்கையும், உள் ஒதுக்கீட்டில் மேற்கொண்ட பணி நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டிய சிக்கல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், அடுத்து மேற்கொள்ளப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கை, மருத்துவ இணை படிப்புகளுக்கான சேர்க்கை ஆகியவற்றில், வன்னியருக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே அறிவிக்கப்பட்ட அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு போன்றவற்றை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, அரசு தரப்பில் இடைக்கால தடை பெற்றால் மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் மேற்கொள்ள முடியும்.இது குறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டுமென தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 comments:

 1. Polytechnic trb அறிவிப்பில் (Notification) அந்த இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை..விண்ணப்பமும் அதற்கேற்றார் போல பதிவிடப்படவில்லை..எனவே அந்த தேர்வுக்கு பாதிப்பில்லை

  ReplyDelete
  Replies
  1. PG trb notification ல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது..எனவே காத்திருக்க வேண்டும்..

   Delete
 2. Nee last varaiyum nadathave matta....

  ReplyDelete
 3. எட‌ப்பாடி தொகுதியில் வெற்றி பெற‌வும்,கூட்ட‌ணிக்காக‌வும் அவ‌ச‌ர‌க‌தியில் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌த்தால் இவ்வ‌ள‌வு இடைஞ்ச‌ல்க‌ள்...
  வ‌ன்னிய‌ர் த‌னி இட‌ ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிம‌ன்ற‌ம் செல்வார்க‌ள் என‌ முன்கூட்டியே க‌ணித்து, தேர்த‌லுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பே த‌ர‌வுக‌ளுட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தால் இவ்வ‌ள‌வு குள‌றுப‌டிக‌ள்,குழ‌ப்ப‌ங்க‌ள் எழ‌ வாய்ப்பே இல்லை..

  ReplyDelete
 4. PGTRB தேர்வு நடைபெற சிக்கல் இருக்காது.
  தேர்வின் முடிவுகள் தாமதமாகலாம்.

  ReplyDelete
 5. கல்விச்செய்தி அட்மின் பலிடெக்னிக்கில் எப்படி 10.5% வரும் அது 2018க்குரிய. பழைய Notificaion ன்னு தெரிந்தே பிரச்சனைக்குரியயதாக்குகிறீரா.....2019Pg தேர்வில சமூகநீதிக்கு அநீதின்னு தலைப்பைபப் போட்டு பணியிடம் கிடைக்காமல் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு காணரம் நீர் தானே...தேர்வர்களையும் குழப்பி வேலைகிடைக்காமல் இன்றுவரை தெருவுக்கு கொண்டுவந்தது போதவில்லையா...உச்சநீதிமன்றத்திற்குஅந்த வழக்கு Rewiwe போயிருக்கு ககண்டிப்பாக தமிழகஅரசுபக்கம் தான் நீதி கிடைக்கும் பால்ப்போம்...நீ எல்லாம் இந்தப் பிழைப்பு பிழைக்கலாமா

  ReplyDelete
  Replies
  1. தம்பி ௨னக்கு ௭ன்ன ..... தெரியும் ரீவ்ஸ் ௭ல்லாம் தள்ளுபடி ஆகும்

   Delete
  2. Review poi irukku adhanala pathikkappatta 35 perukum posting poda vaippu irukka sir tell me

   Delete
  3. வழக்கின் தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் கையில் இல்லை.. வழக்கறிஞர் எடூத்து வைக்கும் வாதத்தில் உள்ளது. சென்ற ஆட்சியில் அரசு சார்பில் வழக்கறிஞர் வேறுதற்போதைய அரசின் வழக்கறிஞர் வேறு....அதே போல் 10.5%ம் உச்சநீதியன்றத்தில் ரத்தாகும்..ஏனெனில் தனிப்பட்ட சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என சென்ற ஆண்டுதான் மராட்டிய மாநில வழக்கில் தீர்ப்புவந்துள்ளது...அருந்ததியர்க்கு இடஒதுக்கீட்டை காரணம் காட்டுகிறார் பாமக வழக்கறிஞர் பாலு.....அருந்ததியர் என்பது தனிப்பட்ட சாதி கிடையாது....சக்கிலியர் பகடையர் போன்ற சாதிகளின் தொகுப்பு தான் அருந்ததியர்....வாக்குப்பொறுக்கிகளாவ் வந்த வினை இது

   Delete
  4. Yes ,revised list very coming soon

   Delete
 6. எந்த சிக்கலும் இல்லை,பிரச்சனையும் இல்லை.எந்த பணிநியமனமும் மேற்கொள்ளப்படவில்லை.தேர்வுக்கு பிறகு தான் selection process

  ReplyDelete
 7. குழப்பி விடுவதே சிலரின் வேலை. தேர்வு நடைபெறும். முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது

  ReplyDelete
  Replies
  1. ௮து ௭ப்படி நடக்கும் வாய்ப்பு இல்லை

   Delete
 8. போட்டி தேர்வு என்று குறிப்பிட வேண்டாம் ,,,trb ellam அதிஷ்ட தேர்வு என்று தான் குறிப்பிட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. போட்டி தேர்வு என்றால் மதிபெண் மட்டும் பார்க்க வேண்டும்

   Delete
 9. When will they conduct trb exam any one tell me

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி