TRB தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு. - kalviseithi

Nov 24, 2021

TRB தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு.

 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.


TRB தேர்வு:


தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.


அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து TRB தேர்வு வாரியமும் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்து தேர்வு தேதியை வெளியிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் அந்த தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

9 comments:

 1. Please inform about pgtrb exam date

  ReplyDelete
 2. Till the end, you won't conduct the exam.....

  ReplyDelete
 3. no exam because 3rd wave corana

  ReplyDelete
  Replies
  1. Adi seruppu... Oduda naayeee.... Corona aavathu ku.... Aavathu....

   Delete
  2. சகோதரரே இப்படி கோபப் படுகிறீர்கள் அப்போது தேர்வை நடத்துங்கள் என்னை செருப்பால அடித்து ஓடுடா நாயே என்று சொன்னால் தேர்வு நடந்து விடுமா யோசித்துப் பாருங்கள் சகோதரரே இந்த தேர்வு அறிவிப்பு யாருடை லாபத்திற்காக என்று ஏன் தேர்வு அறிவிப்பு வரவில்லை இன்றைய சூழ்நிலை அவ்வாறு உள்ளது ஆகையால் நான் அவ்வாறு பதிவிட்டேன் உங்களை மாதிரி என்னால் மரியாதை குறைவாக பேச முடியாது ஏன் என்றால் உங்களின் என் மீதான கோபம் அர்த்தமற்றது ஏன் என்றால் உங்களின் கோபம் அரசு மீது காட்டுங்கள் நன்றி

   Delete
 4. Sir please give me editing option for application form to change my address because no exam centre is given.

  ReplyDelete
 5. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு.. ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே.. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி