தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான " ஊரகத் திறனாய்வு தேர்வு " நடைபெற்று வருகிறது.
தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 9 - ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.
ஆண்டு வருமானம் :
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ , 1,00,000 / - க்கு ( ரூபாய் ஒரு இலட்சத்திற்கு ) மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
30.01.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்கைைள 06.12.2021 முதல் 14.12.2021 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரம் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
Thank you for information
ReplyDelete