பள்ளி பார்வையின் பொது 10 ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே இல்லை முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை - kalviseithi

Dec 12, 2021

பள்ளி பார்வையின் பொது 10 ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே இல்லை முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

 

விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் கல்வி மாவட்டம் , முத்தார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியினை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இன்று ( 10.12.2021 ) பிற்பகல் 2.00 மணிக்கு பார்வையிடப்பட்டது தொடர்பான சுற்றறிக்கை :


 விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் கல்வி மாவட்டம் , முத்தார்பட்டி , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தற்செயல் விடுப்பிலும் , பொறுப்பு தலைமையாசிரியரும் பள்ளியில் இல்லாதது கண்டறியப்பட்டது.


பிற ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராமலும் , பள்ளிக்கு வந்தும் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடாமலும் முழுமையாக வருகைப் பதிவேட்டை முடிக்காமலும் இருந்துள்ளனர்.


 பள்ளியில் பொறுப்புத் தலைமையாசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இல்லை . ஆசிரியர்கள் எவரும் பொறுப்பாக கவனிக்காமல் மாணவர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்துள்ளனர். 


அனைத்தும் மிகவும் கண்டிக்கத்தக்கதும் , பொறுப்பற்ற செயலுமாகும். எனவே , இனிவரும் காலங்களில் பள்ளியின் தலைமையாசிரியர் விடுமுறையில் இருந்தாலும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பள்ளியினை பொறுப்பெடுத்து முழுமையாக வருகைப் பதிவேட்டை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். 

பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எவரும் சொந்த வேலையாக பள்ளி வேலை நேரத்தில் வெளியே செல்ல அனுமதியில்லை.

மேலும் , மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மட்டும் செவ்வனே செய்திடவும் , மாணவர்களின் நலன் கருதி , கோவிட் 19 நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களை சரிவர கவனிக்கவும் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தவறும்பட்சத்தில் , சார்ந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.2 comments:

  1. Ivaingalukku thana neenga laksha la salary kodukkringa....
    Neengalum unga governmentum....

    ReplyDelete
  2. பொது இல்ல போது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி