தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2021

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு.

 

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் I, II, II-ஏ ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளை தமிழ் மொழித் தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடத்தப்படும். குரூப் III, IV ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும். கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழ்நாட்டில் அரசுப்பணியில் சேர்வதை தடுக்க கட்டாய தமிழ் தேர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி சார்பில் இனி நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும். தமிழ் கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்தி, மனித வள மேலாண்மைத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர், மருத்துவ பணியாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நிதித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

13 comments:

  1. Super sir good news for tamil nadu students.

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களை பழைய g o படி பணிநியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. Trb exam Tamil compulsory.. question paper pattern may change

    ReplyDelete
  4. Dear respectable kalvi u have published all the news properly except suffers odd 2013 batch pessed cantitates. Kindly concern their tqsuffers and convey to government

    ReplyDelete
    Replies
    1. u may rest in peace, after tet 2013, 3 trbs gone and 4th one is going to happen, but still u r all begging ...

      Delete
    2. They are not begging they are asking for their Wright's. போரில் வெற்றி பெற்றவர்க்கு பரிசு தராமல் திரும்ப திரும்ப போருக்கு போக சொல்வது எவ்விதத்தில் நியாயம்.

      Delete
  5. வேலைவாய்ப்பில் அனைத்து முன்னுரிமைகளையும் தருகிறீர்கள் ஆனால் வேலையைத்தான் கொடுப்பது போல் தெரியவில்லை.

    ReplyDelete
  6. முதலில் முதியோர்களுக்கு வேலை கொடுக்கவும். வேலை வாய்ப்பில் பதிந்து காத்திருப்போருக்கு.....

    ReplyDelete
  7. அப்போ தமிழ்நாட்டிலே பிறந்து பிற மொழி medium உருது, தெலுகு, மலையாளம் மற்றும் கன்னட படித்வர்களின் நிலை என்ன?? இந்த முதல்வருக்கு தானே vote போட்டோம்..

    ReplyDelete
  8. அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை உயரும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி