மகாகவி பாரதியார் பிறந்த தினம் இன்று ( 11.12.2021 ) - kalviseithi

Dec 11, 2021

மகாகவி பாரதியார் பிறந்த தினம் இன்று ( 11.12.2021 )

 

 .......... மகாகவி பாரதி வாழிய !
====================

எட்டைய புரத்தில்
எரிமலை சமைத்தார் - அவர்
எண்ணிய விடுதலை வரும்படி அமைத்தார் ,

கட்டிய கவியில்
கரைய வைத்தார் - நமைக்
கவர்ந்திடும் வரிகளில் உறைய வைத்தார் ,

கொட்டிய வார்த்தையில்
குரல்வளை நெரித்தார் -தன்
கொடூர அக்னி பரல்களை விரித்தார் ,

வெட்டிடும் பாடலில்
வீரத்தைப் பதித்தார் - அதில்
வெள்ளையர் அடிமை கோரத்தைச் சிதைத்தார் ,

தமிழின் பெருமையைத்
தன்கவியில் உரைத்தார் - அதில்
தன்மானம் உயிரென பொன்கவியில் கரைத்தார் ,

உமிழும் வரிகளில்
உணர்வைக் கூட்டினார் - நம்
உள்ளத்தில் எழுந்திடும் அயர்வை மாற்றினார் ,

கமழும் தமிழைக்
கவியில் காட்டினார் - தன்
கருத்தினை விளக்கியே புவிதனில் நாட்டினார் ,

சிமிழாய் உரிமையைச்
சிதையாமல் காத்தார் - நம்
சிந்தையில் பாரதி விதையாகச் சேர்த்தார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி