மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவைத் தொகையும் விரைவில்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவைத் தொகையும் விரைவில்....

 

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப் படுவதோடு, 18 மாத நிலுவை தொகையும் விரைவில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு மே மாதம் முதல் 13 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை ஜூலை மாதம் 28 சதவீதமாக உயர்த்தி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அக்டோபரில் இது மேலும் 3 சதவீதம் உயர்த்தப் பட்டு 31 சதவீதமானது.கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை அளிக்கும்படி, மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த மாத துவக்கத்தில் இந்த நிலுவை தொகை வழங்கப்படுவதோடு, அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி