மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - பள்ளியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து தற்போது பள்ளியில் இறுதியாண்டு ( +2 ) பயிலும் மாணவர்களுக்கு SMS மற்றும் Whatsapp செயலிகள் மூலம் விளம்பரம் அளிக்க ஏதுவாக , 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி இறுதியாண்டு ( +2 ) பயிலும் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அந்த படிவ அறிக்கையினை ( Excel Sheet ) E- Mail மூலம் சார்ந்த சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும் , அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பவும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி