B.Ed கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புது கட்டுப்பாடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 26, 2021

B.Ed கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புது கட்டுப்பாடு.

பி.எட். கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் பி.எட். பட்டப்படிப்பை நடத்தும் 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அவ்வப்போது ஆசிரியர்களை மாற்றி மாற்றி நியமிப்பதால் தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

மேலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதிலும் நம்பகத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பி.எட். கல்லுாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பு அதிகாரி கோவிந்தன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லுாரிகள் தங்கள் நிறுவனத்தில்பணி அமர்த்தியுள்ள ஆசிரியர்களின் விபரங்களை இ- - மெயில் வாயிலாக பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.

கல்லுாரிகள் அளிக்கும் ஆசிரியர் விபரங்களை ஆய்வு செய்து அவர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே பல்கலையின் செய்முறை தேர்வு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. b.ed colleges ellam dabba.... many conducting courses without students.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி