ஓமைக்ரான் கொரோனா அச்சம் எதிரொலி – இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2021

ஓமைக்ரான் கொரோனா அச்சம் எதிரொலி – இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமல்!

 

தென் ஆப்பிரிக்காவில் சென்ற வாரம் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.


புதிய கட்டுப்பாடுகள்


தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து வர இருக்கும் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தென் ஆப்பிரிக்காவில் சென்ற வாரம் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் ஏதேனும் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உரிய வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸால் பரவிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


இந்த பரிசோதனை முடிவுகள் பெறும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதில் முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்த பட வேண்டும். அந்த 7 நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால், அதற்கு அடுத்த 7 நாட்கள் அவர்களின் உடல்நிலையை பற்றி கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த புதிய விதி முறைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஓமைகாரன் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூடுதலாக கட்டுபாட்டை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி