தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2021

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.


கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்

அதன்பிறகு, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருப்போர் மற்றும் 2021 மே 30-ம் தேதி முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளதாம். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், ஆயிரக்கணக்கானோர் உடனடியாக ஓய்வு பெறும் நிலை ஏற்படும். இதனால், ஓய்வூதிய பணப்பலன்கள் உடனடியாக கிடைக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெற்ற உடனே பணப்பலன்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக அரசு பத்திரம் வழங்க முடிவு செய்து பரிசீலனையில் உள்ளது. இந்த பத்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

16 comments:

 1. வேலைவாய்பற்ற இளைஞர் களுக்கு நல்ல செய்தி வயதை 55ஆக குறைக்க வேண்டும்

  ReplyDelete
 2. மிகவும் நல்ல முடிவு. விரைவில் நிறைவேற்ற இறைவன் துணை புரியட்டும்.

  ReplyDelete
 3. வரும்ம்ம் ஆனால் வராது

  ReplyDelete
 4. Replies
  1. உனக்கு மட்டும் இது பொருந்தும்

   Delete
 5. Velaivaipptra elaigarkaukku vaippu kedaikum.

  ReplyDelete
 6. 30yrs service or age58 எது முதன்மையானது அதை எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் நல்லது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி