ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் : பள்ளிக்கல்வித் துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2021

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் : பள்ளிக்கல்வித் துறை தகவல்

 

பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


கடந்த நவம்பர் 23-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய முறையில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி போதுமான இடமின்றி இயங்கிவரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம். எனினும், இட வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்.


இதுதவிர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.


முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும். பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



13 comments:

  1. விரைவில் என்றால் அர்த்தம் என்ன என்று சொல்லுங்க ஐயா
    அதுக்கு அப்புறம் நீங்கள் கலந்தாய்வு நடத்துங்ககககககககக பள்ளி கல்வித்துறை

    ReplyDelete
  2. Opening lam nalla than irukku but Finishing sari illaiyeppaa

    ReplyDelete
  3. இப்படியே சொல்லிக்கொண்டே இருங்கள்.நடத்தாதீர்கள்.

    ReplyDelete
  4. விரைவில் சொல்லி சொல்லியே அடுத்த வருடம் வந்து விடும் கலந்தாய்வு வைக்க என்ன தயக்கம்?

    ReplyDelete
  5. மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது? கடந்த 10 வருடங்களாக நடக்கவில்லை தயவு செய்து அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்துவோம்

    ReplyDelete
  6. சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  7. விரைவில்.... செங்கோட்டையன் சார் பரவால போல

    ReplyDelete
  8. விரைவில் நா yeppo?
    இந்த விரைவில் nra வர்தைய கேட்டாலே செங்கோட்டையன் நியாபகம் தான் வருது. அது சரி வாயால வட சுடுறது விட்டுட்டு அத செயல் ல காட்டுங்க. விரைவில் லாம் விரைவில்..........

    ReplyDelete
  9. இப்படியே சொல்லி சொல்லி 2022 வர போகுது.இது தானா உங்க விரைஐஐஐஐஐவில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி