கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2021

கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

 

ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில், உள்ள சிஎஸ்ஐ தூய பெத்ரூ ஆலயத்தில் 10,00 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம், அமோக வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் கூறினார். அதே போல, கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட கற்று கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி