கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர முதல்வருக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 23, 2021

கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர முதல்வருக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை


சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல்: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் உள்ள கணினி அறிவியலை அரசு பள்ளி மாணவர்களும் கற்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 6ஆவது பாடமாக கணினி அறிவியல் பாடம் கட்டயமாக்கப்பட்டு 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 150 கோடியில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. 

ஆட்சி மாற்றத்தால் புறக்கணிப்பு: ஆட்சி மாற்றம் காரணமாக 2011}12  கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தலையீட்டால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும் கணினி அறிவியல் பாடம் புறக்கணிக்கப்பட்டது.  இதனால் அரசு பள்ளி மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி கற்கும் நிலை கேள்விக்குறியானது. மேலும் பிஎட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் அரசுப்பள்ளியில் வேலை கேள்விக்குறியானது. 

கணினி அறிவியலில் இதர மாநிலங்கள் முன்னேற்றம்: தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை திட்டத்தை பின்பற்றி கேரளம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து கட்டாய தனிபாடமாக வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது.  மேலும் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. கேரள மாநிலம் இந்தியாவில் கணினி அறிவியல் கற்பித்தலில் முதல் மாநிலமாக திகழ்கிறது.  ஆனால் கணினி அறிவியல் பாடத்தை முதன்முதலாக சமச்சீர் கல்வியில் வாயிலாக அறிமுகப்படுத்திய தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 


கணினி கல்விக்காக வந்த 900 கோடி நிதி: 2011ஆம் ஆண்டு மத்திய அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகம் மற்றும் கணினி கலவி வழங்குவதற்கு ரூ. 900 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் தமிழக அரசு கணினி கல்விக்காக பயன்படுத்தாமல் எட்டு ஆண்டுகள் வைத்திருந்த நிதியை  மத்திய அரசுக்கே திரும்ப அனுப்ப இருந்தது. இதையறிந்த அப்போதைய கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க இருந்த நிதியை தடுத்து நிறுத்தியதன் பயனாக 2019 ஆம் ஆண்டு அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைப்பட்டது. மேலும் கணினி அறிவியலில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு அதில் அறிவியல் பாடத்துடன் இணைப்பாக மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைக்கப்பட்டது.  இதற்கு ஆசிரியர்கள் மற்றும் செய்முறை வகுப்புகளில் ஏதுமின்றி இந்த பாடத்தை மத்திய அரசின் நிதிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். 


இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலர் வெ.குமரேசன்: 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியில் தொடங்கிய பிரச்சனையில் கணினி அறிவியல் பாடம் மட்டும் சத்தம் இல்லாமல் நீக்கப்பட்டது. கணினி பாடத்திட்டத்தை கொண்டுவரக் கோரி கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து பல அமைச்சர்களிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் அறிவியல் பாடத்தில் இணைப்பு பாடமாக பெயரளவில் மூன்று பக்கங்கள் மட்டும் இணைக்கப்பட்டது. சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தினால் அரசு பள்ளிகளில் கணினி அறிவியலில் படித்தவர்களுக்கும் வாழ்வாதாரம் உண்டு என நம்பி இருந்தோம். 2018 ஆம் ஆண்டு கணினி பயிற்றுநருக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நடைபெற்ற  தேர்வில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகளும் நடைபெற்றது. கணினி ஆசிரியர்களுக்கு உரிய அரசாணை இல்லாததால் இன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களிலும் பி.எட் பட்டம் பெற்றும் இன்று பயனில்லாமல் வாழ்வை இழந்த நிலையில் உள்ளோம். ஏழை மாணவர்களின் பயன் பெறும் வகையில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தனி பாடமாகவும் ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப் பாடமாக கொண்டு வரவண்டும் என்றார்.


திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி