அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் 'கவுன்சிலிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2021

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் 'கவுன்சிலிங்'

* அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் 'கவுன்சிலிங்'கை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


* தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பிரச்னையால் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.இடமாறுதல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் விரிவான தீர்ப்பளித்தது.


* அதில், இடமாறுதல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதை பின்பற்றி, செப்டம்பருக்குள் இடமாறுதலை முடிக்க உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை பிரச்னைகளால் இடமாறுதல் பணிகள் நடக்கவில்லை.


* இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு துவங்கும் நிலையில், கவுன்சிலிங்கை நடத்துவதா, தள்ளி வைப்பதா என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆண்டு எப்படியாவது கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என, பல ஆசிரியர் சங்கங்கள், அமைச்சரிடம் மனுக்கள் அளித்துள்ளன. இதன்படி, ஜனவரியில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த முடிவானது.


* உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கவுன்சிலிங்குக்கான விதிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான அரசாணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.இதையடுத்து, ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 'ஆன்லைன்' வழியில் இடமாறுதல் வழங்க, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.19 comments:

 1. September...
  October...
  November...
  December...
  Now January...
  Then..........

  ReplyDelete
 2. நிச்சயமாக நடக்குமா?

  ReplyDelete
 3. எந்த வருட ஜனவரி னு சொல்லவே இல்ல

  ReplyDelete
 4. போங்கடா நீங்களும் உங்க counselling um

  ReplyDelete
 5. ஆணியே புடுங்க வேண்டாம்

  ReplyDelete
 6. 2026 ஜுலையில் தான் நடைபெறும்.. இவர்கள் நிறைய பேசுகிறார்களே தவிர செயலில் ஒன்றுமே இல்லை..

  ReplyDelete
 7. June
  July
  August
  September
  October
  November
  December
  Now...
  January
  Apram...
  February
  March
  April
  May
  And repeat...
  Poi vera velai இருந்தா பாருங்க
  இங்க எல்லாரும் டுபாக்கூர் தான் போல.... மனுஷனா இருந்தா சொல்ற வார்தைல நாணயம் வேணும். அது சரி January la dhan election vara போகுதே அப்போ yepdi counselling நடதுவிங்க.?..என்ன boss நீங்க காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. Yepdi லாம் design design aa poo suthuringa பாருங்க. அங்க தான் உங்க திறமை இருக்கு.

  ReplyDelete
 8. வந்தான்-September
  சுட்டான்-November
  செத்தான்-December
  ரிப்பீட்டு-January

  ReplyDelete
 9. இப்படியெல்லாம் அமைச்சருக்கு அனுப்பினால் நல்லது.

  Teeter ல் எதுவுமே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்... பாவம்

  ReplyDelete
 10. எந்த வருட ஜனவ‌ரி மாதம் என்று சொல்லுங்க

  ReplyDelete
 11. சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் விரைவு படுத்தி கலந்தாய்வு நடத்த கேட்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அடக்கம் செய்யப்பட்டு வெகுகாலம் ஆகிறது

   Delete
 12. counseling epdi nadakkum irukkum vaccant placeku 2774 p.g temporary post potache?

  ReplyDelete
 13. ஸ்டாலின் அவர்களுக்கு என்னாச்சு? ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதில் என்ன குழப்பம்? ஏன் நடத்தாமல் செங்கோட்டை யான் மாதிரி இழுத்தடிக்கிறார்கள், அதிமுக ஆட்சியில் அப்படி என்றால் திமுக ஆட்சியும் இப்படி தான் உள்ளது, 3 வருடங்களாக கவுன்சிலிங் நடத்தவில்லை, திமுக ஆட்சியும் நடத்தும் என்ற நம்பிக்கை யில் தான் எல்லாரும் ஓட்டு போட்டார்கள், கல்வி அமைச்சர் பொய்ய மொழி என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அண்ணண் உதயநிதி பின்னாடி சுற்றுக்கிறார் தவிர, ஆசிரியர்கள் குறைகளை செவி கொடுப்பதில்லை

  ReplyDelete
 14. அம்புட்டு கொழம்பும் அம்புட்டு ருசி...
  ஆச்சி மசாலா....
  அம்புட்டு புளுகும் அம்புட்டு ருசி...
  வளைச்சி குத்துங்க சூரியன்ல....😄😄😄

  ReplyDelete
 15. அன்றைக்கு காலையில 6மணி கோழி கொக்கரோக்கோனு கூவுச்சு

  ReplyDelete
 16. June
  July
  August
  september
  October
  November
  December
  January..............................
  Feb
  Ma
  Ap...1

  ReplyDelete
 17. I am lavanya working as BT ENGLISH in thanjavur aranmanai girls higher secondary school willing to mutual transfer to karur / trichy (surroundings of kulithalai)contact 6385582324

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி