ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல் - kalviseithi

Dec 14, 2021

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

 

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. 


இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்


இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.


இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது.


அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்


பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.

9 comments:

 1. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் மத்திய அரசு வழங்கும் புதிய ஊதிய விகிதம் வேண்டும் புதிய அகவிலைப்படி வேண்டும் புதிய வீட்டு வாடகைப்படி வேண்டும் மத்திய அரசு அறிவித்தாலும் அதை அப்படியே வேண்டும்.
  ஆனால் மத்திய அரசு அறிவித்த புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? நீங்கள் Retirement life சொகுசாக இருக்கணும் என்று
  வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்...
  பல லட்சக் கணக்கில் இளைஞர்கள் தம் வாழ்நாளில் ஒரு அரசு வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கி பார்ப்போமா என்றுஏங்கித் தவிக்கிறார்கள் என்றாவது ஒருநாள் அவர்களுக்காக வாய் திறந்து குரல் கொடுத்தது உண்டா?
  மனச்சாட்சி உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒருவர் கூடவா
  இதற்கு இல்லாமல் போனார்கள்???

  ReplyDelete
  Replies
  1. ம‌த்திய‌ அர‌சு ஊழிய‌ர்க‌ளுக்கான‌ பென்ச‌ன் திட்ட‌ம் வேறு...த‌மிழ‌க‌ அர‌சு ஊழிய‌ர்க‌ளுக்கான‌ பென்ச‌ன் திட்ட‌மும் ஒன்ற‌ல்ல‌...

   ஒரு தெளிவான‌ வ‌ரைமுறையின்றியும்,
   வ‌ழிகாட்ட‌ல் ந‌டைமுறைக‌ளின்றியும்,வெளிப்ப‌டைத் த‌ன்மையின்றியும் த‌மிழ‌க‌ அர‌சின் ஓய்வூதிய‌த் திட்ட‌ம் உள்ள‌து..
   அடிப்ப‌டை புரித‌ல் கூட‌ உங்க‌ளுக்கு இல்லை என்ப‌து இத‌ன் மூல‌ம் தெளிவாகிற‌து..
   அர‌சூழிய‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் காலிப்ப‌ணியிட‌ங்க‌ளை நிர‌ப்ப‌ வேண்டும் என‌ வேலைவாய்ப்ப‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளுக்காக‌ ப‌ல‌முறை போராடியுள்ள‌ன‌ர்...
   ஆனால் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளோ அவ‌ர்க‌ளின் நியாய‌மான‌ கோரிக்கைக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...வ‌ன்ம‌த்தோடு இப்படி குறைகூறித் திரிவ‌தை நிறுத்த‌வும்...

   Delete
  2. உங்களுக்கு வேலை தருவது அரசுஊழியர்களா இல்லை அரசாங்கமா...முட்டாள் உங்கள் சுயநலத்திற்காக ஒருநியாமான கோரிக்கையை குறை சொல்வதேன்.அரசிடம் கோரிக்கை வைக்க யாருக்கும் உரிமை உண்டு அதைக் கொச்சைப் பபுத்த எவனுக்கும் உரிமையில்லை

   Delete
  3. ஓய்வு பெறும் வயதை 60 ஆக்கியதை எதிர்த்து போராட தெரியாத இளைஞர்கள்... இப்படி தான் அரசு ஊழியர்கள் கோரிக்கையை குறை கூறிக்கொண்டு இருப்போம் .சோசியல் மீடியாவில் கருத்து சொன்னால் மட்டும் போதாது.... ஓய்வு பெறும் வயதை குறைக்க அரசுக்கு வழியுறுத்தினால் பல்வேறு இளைஞர்கள் பலன் அடைவர்....

   Delete
  4. அரசு ஊழியர்களும் கஷ்டப்பட்டு படித்து தான் வேலைக்கு போயிருக்காங்கள் அவர்களை நீங்கள் தவறாக பேசுகிறீர்கள்

   Delete
  5. Pension bill for judges passed in the parliament just today.

   Delete
 2. இதுவும் கடந்து போகும்

  ReplyDelete
 3. Write exam get job. Why mourning other matters...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி