தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 24, 2021

தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

 

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஜனவரியில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களை உரிய இடங்களில் பணியமர்த்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் பிழையின்றி பட்டியல் தயாரித்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ஜெயகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி