Higher Secondary HM Promotion Panel - மாவட்ட வாரியாக சென்னையில் ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2021

Higher Secondary HM Promotion Panel - மாவட்ட வாரியாக சென்னையில் ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தகுதியுடையோர் பட்டியல் - மாவட்ட வாரியாக சென்னையில் ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , 01.01.2022 நிலவரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கானத் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து சமர்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோரப்பட்ட விவரங்களை கீழ்கண்டுள்ளவாறு , மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டுள்ள நாளில் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் விவரங்களை சார்ந்த பிரிவு உதவியாளர் வழியாக நேரில் ( மடிக்கணினியுடன் வருகைபுரிந்து ) ஒப்படைக்குமாறும் , மேலும் இப்பட்டியலினை மிக கவனமாக தயார் செய்து , முழு அளவில் பரிசீலினை செய்து , தகுதியுடைய எவரது பெயரும் விடுபடாமல் , அதே சமயம் தகுதியற்ற நபர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் நிலையிலேயே தவிர்த்து எவரது பெயரும் சேர்த்திடாமல் , எவ்வித சுணக்கத்திற்கும் இடம் அளிக்காத வகையில் டபிள்யு 1 பிரிவிற்கு நேரில் ஒப்படைக்குமாறும் மேற்கண்ட அனைத்து விவரங்களையும் குறுந்தகட்டில் தொகுத்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 comment:

  1. இதெல்லாம் 21ஆம் தேதியே வந்துருச்சு..கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிடுங்க...பழச வச்சே வண்டியோட்டிப் பிழைப்பு நடத்தவேணாம்.....கலந்தாய்வு நடக்குமா நடக்காதா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி