SC / ST மாணவர்களுக்கான Pre / Post Matric கல்வி உதவித்தொகைக்கு 13.12.2021 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2021

SC / ST மாணவர்களுக்கான Pre / Post Matric கல்வி உதவித்தொகைக்கு 13.12.2021 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 

SC / ST மாணவர்களுக்கான Pre / Post Matric கல்வி உதவித்தொகைக்கு 13.12.2021 முதல் escholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் ( பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் ) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணைய தளம் 13.12.2021 அன்று திறக்கப்படவுள்ளது


மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் ( ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் ) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்படவுள்ளதால் மேற்கண்ட திட்டத்தின் கீழ் வாய்ந்த ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆகவே , மாணாக்கர்களும் தமது கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று , வருமான சான்று , மதிப்பெண் சான்று , சேமிப்புக் கணக்குப் புத்தக நகல் , ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் 13.01.2022 - க்குள் கல்வி இணையதள வழி ( escholarship.tn.gov.in ) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும் , மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி