TNPSC - Online Free Test Link and Important Material for Aspirants !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2021

TNPSC - Online Free Test Link and Important Material for Aspirants !!

 


🌱 தாவர உறுப்பு நீரை நோக்கி வளர்ந்தால் - நேர் - நீர் சார்பசைவு

🌱 தாவர உறுப்பு நீரைவிட்டு விலகு வளர்ந்தால் - எதிர் நீர் சார்பசைவு

  சார்பசைவு

🌱 தூண்டலின் திசைக்கு துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத தூண்டலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்லோன வறைதல் -  தொங்கு அசைவுகள்

🌱 ஒரு பொருளைத் தொடுவதால் ஏற்படும் துலுங்களுக்கு ஏற்ப தவர உறுப்பு  தசை சாராமல் வகைக்கள்

(எ.கா) தோட்டாற்சிடணுங்கி

🌱ஒளியின் துலங்களால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி - ஒளியுறு வளைதல்

(எ.கா.) டேன்டலியான் மலர்கள்

🌱 வெப்பநலையின் துலங்களால் ஏற்படும் தாவரத்தின் திசைசாரா வளைதல் - வெப்பமுறை வளைதல் 

(எ.கா.) குரோக்கஸ்  (குங்குமப்பூ) 


🥝 தாவரங்கள் ஒளிச்சேர்க்கை  நடைபெறும் விதம் பற்றிய தகவல்கள்:-

🌤 ஒளிச்சேர்க்கை - தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.

- ஒளிச்சேர்க்கை நிகழ்வு தாவரங்களின் பசுமையான இலைகளில் நடைபெறுகின்றன

- பசும் இலைகள் பச்சையம் மற்றும் சூரிய ஒளி இவற்றின் முன்னிலையில் கரியமிலவாயு மற்றும் நீர் ஆகியவற்றை இணைத்து உணவுதயாரிக்கின்றன

🌤 பசுந்தாவரங்கள் சூரியஒளி ஆற்றல் உதவியுடன் கரியமிலவாயு மற்றும் நீரைப் பயன்படுத்தி பச்சையம் துணைகொண்டு கார்போஹைட்ரேட்டைத் தயாரிக்கும் நிகழ்ச்சி

🌤 ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

🌤 ஒளிச்சேர்க்கைக்கு தேவை - ஒளி ஆற்றல், பச்சையம், கரியமில வாயு, நீர்

🌤 பசுங்கனிகங்கள் - முக்கிய ஒளிச்சேர்க்கை நுண்ணுறுப்பு

- உணவு தயாரிக்கத் தேவையான பச்சைய நிறமிகளைக் கொண்டுள்ள

🌤 ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி நிலைகள் - ஒளிவினை, இருள்வினை

🌤 ஒளிவினை - நிறமிகள், சூரிய ஒளி ஆற்றல், நீர் ஆகியவற்றை ஈடுபடுத்தி ATP மற்றும் NADPH2 ஆகியவற்றை உருவாக்கும் வினை

🌤 ATP - அடினோசின் டிரை பாஸ்பேட்

🌤 NADPH2 - நிக்கோட்டினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட் ஒடுக்கம் அடைந்த்து.

🌤 இருள்வினை - ஒளிவினையில் உண்டான ATP மற்றும் NADPH2 ஆகியவற்றின் உதவியால் கரியமில வாயுவானது

🌤 கார்போஹைட்ரேட்டாக   (Co2) ஒடுக்கம் அடையும் வினை - இருள்வினை

🌤 இருள்வினை நடப்பதற்கு ஒளி தேவையில்லை 

🌤 நீராவிப் போக்கு  - இலைகள் மற்றும் பசுமையான தண்டு மூலம் இழக்கப்படும் நிகழ்ச்சி

🌤 நீராவிப் போக்கு வகைகள் - 3

1. இலைத்துளை நீராவிப்போக்கு

2. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு

3. பட்டைத் துளை நீராவிப்போக்கு

1. இலைத்துளை நீராவிப்போக்கு:-

🌤 இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது

🌤 இலைகள் மற்றும் தண்டுகளின் புறத்தோலில் காணப்படும் சிறிய துளைகள் - இலைத்துளை

2. கியூட்டிக்கிள் நீராவிப் போக்கு:-

🌤 இலையின் புறத்தோலின் மீது காணப்படும் மெழுகுப்பூச்சி - கியூட்டிக்கிள்

🌤 மிக குறைந்த அளவில் நீராவிப் போக்கு நடைபெறும்

3. பட்டைத்துளை நீராவிப்போக்கு:-

🌤 பெரிய மரவகைத் தாவரங்களின் பட்டைகளில் காணப்படும் சிறிய துளைகள் - பட்டைத் துளை

🌤 இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடைபெறுகிறது என்பதை விளக்கும் சோதனை - மணி ஜாடி சோதனை 


🥝தாவர உலகம் பற்றிய தகவல்கள்:-

🌱பாசிகள் - தாலோஃபைட்டுகள்

(எ.கா.) லாமினோரியா, ஸ்பைரோனகரா, கேரா

🌱 நில நீர் வாழ்வன - பிரையோஃபைட்டுகள்

(எ.கா.) ரிக்ஸியா, மாஸ்

🌱 விதைகளற்ற தாவரங்கள் - டெரிடோஃபைட்டுகள் 

(எ.கா.) பெரணிகள், நெப்லோபிஸ்

🌱 திறந்த விதை தாவரங்கள் - ஜிம்னோஸ்பெர்ம்கள்

(எ.கா.) சைகஸ்,  பைன்ஸ்

🌱 மூடிய விதை தாவரங்கள் - ஆஞ்சியோஸ்பொம்கள்

(எ.கா.) புல், தென்னை, மா, வேம்பு

🌱 ஒட்டுண்ணி வகை தாவரம் - கஸ்குட்டா

🌱 பூச்சிகள் உண்ணும் தாவரங்கள் - நெப்பந்தஸ், டிராஸிரா

🌱 தாவரங்கள் பல செல்களால் ஆன எந்த வகையானது - யூகேரியாட்டுகள்

🌱 செல்கள் எந்த வகையான செல்சுவர் கொண்டுள்ளது - செல்லுலோஸ்

🌱 தாவரங்கள் பெரும்பாலானவை தற்சார்பு உட்டமுறை கொண்டது. 


🥝தாவரங்கள் மற்றும் கனிகள் சிறப்புகள் பற்றிய ஒரு சில தகவல்கள்:-


1) நீர்வாழ் தாவரங்களின் வகைகள்:-

🍃 நீரில் மிதக்கும் தாவரங்கள் - ஐக்கார்னியா, லெம்னா, பிஸ்டியா, அசோல்லா

🍃 நிலத்தில் வேரூன்றி நீரில் மூழ்கி வாழும் தாவரம் - ஹைட்ரில்லா, செரட்டோஃபில்லா

🍃  நிலத்தில் வேரூன்றி நீரில் மூழ்கி வாழும் கிழக்கு தாவரம் - வாலிஸ்னேரியா

🍃 நிலத்தில் வேரூன்றி நீரில் மிதந்து வாழும் தாவரம் - அல்லி (நிம்ஃபயா), தாமரை (நிலம்பியம்)

🍃 நீர் நில வாழும் தாவரம் - லிம்னோபில்லா, ஹெட்ரோஃபில்லா


2) நில வாழ் தாவரங்கள் வகைகள்:-

🍂 பூச்சி உண்ணும் தாவரம் - நெபத்தஸ், டூரோசிரா, அட்ரிகுலேரியா

🍂 வறன்ட நில தாவரம் - சப்பாத்தி கள்ளி, கற்றாழை 

🍂 இலையுதிர் தாவரங்கள் - சந்தனம், தேக்கு, மூங்கில்

🍂 பசுமை மாறா தாவரங்கள் - ஒக், ஏபோனி, சால்.

Online Free Test Link

Touch Here to join Online test

Important Material for Aspirants

2000 Question and Answer

Touch Here to download pdf






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி