TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் - வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2021

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் - வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பாலி டெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்காக தேர்வில் வெளிமாநிலத் தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8- ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு இதே பணியி டங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23ம் தேதி அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது. இவ்விவகாரத்தில் சென்னைஉயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், அத் தேர்வை ரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கரோனா முடக்கம் காரணமாக கடந்தஇரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, வரும் 8-ம் தேதி முதல் 12 ம்தேதி வரை நடைபெறுகிறது. வெளிமாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே ரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங் களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்.


தற்போது, தமிழ்நாட்டின் அனைத்து நிலை போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


எனவே, இந்த அரசாணை வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கும் பொருந்தும் வகையில் வழிவகுக்க வேண்டும்.


இதற்கான அறிவிப்பாணையை தேர்வுக்கு முன்னர் வெளியிட வேண்டும். இத்தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். வேலை வாய்ப்பும் பறிபோகும்.

4 comments:

  1. அருமையான கோரிக்கை.. இவ்ளோ நாள் எந்த ஆணியை புடிங்கி கொண்டு இருந்தீர்கள்.. நாளை தேர்வு இன்று வந்து கோரிக்கை வைத்தால் எடுபடுமா???😊😊😊

    ReplyDelete
  2. Too late.. but congrats to all...

    ReplyDelete
  3. already ithe problem 3 yr gab... same now ini 5 yr agum.. ini enennana pananumo panunga.. bt evanum job pogamudiyathu ipdiye ponathuna.. enga irunthu pa varinga neenga ellam.. ivlo naal enga poninga... ipo evan ungala kooptathu.. chai..che.. che..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி