பணி மாறுதல் தொடர்பாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் 12.01.2022 வரை EMIS மூலம் விண்ணப்பிக்க அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2022

பணி மாறுதல் தொடர்பாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் 12.01.2022 வரை EMIS மூலம் விண்ணப்பிக்க அவகாசம்!

 

பணி மாறுதல் தொடர்பாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் 12.01.2022 வரை EMIS மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது - சுற்றறிக்கை - 5




2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. 

வழக்கறிஞரின் சட்டக்கருத்துப்படி ஆசிரியர் பயிற்றுநர் நிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற வழக்கு தொடர்ந்து வழக்கு தீர்ப்பாணை அடிப்படையில் பணி மாறுதல் பெற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் நடைபெறவுள்ள கலந்தாய்வில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 12.01.2022 தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.


மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS online ) யில் 12.01.2022 அன்று பிற்பகல் 5 மணி வரை ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளவும் , அதன் பின்னர் மேற்கண்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் ( Approval ) செய்வதற்கு 13.01.2022 அன்று பிற்பகல் 5 மணி வரை இணையதளத்தில் பரிசீலிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி