2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 11, 2022

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு உத்தரவு.

 நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


இதனை கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் பதிவிட்டுள்ளது.

2 comments:

  1. தனிநபருக்கு அல்ல நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்

    ReplyDelete
  2. நியுமடா டி ம் கே கை கூலி ......மத்திய அரசுடா மடையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி